Saturday, January 31, 2009

கண்டன கவிதைப்போராட்டம்

karthik J December 21, 2008 10:12 PM PST நன்றி
ஊடறு இக்குறிப்பை ஊடறுவில் பிரசுரித்தமைக்கு. புலம்பெயர் நாட்டில் தான் மிகக் கேவலமாக பெண்கள் சந்திப்பு போன்றவற்றை விமர்சித்து கொச்சைப்டுத்துகிறார்கள் சில புறம்போக்குகள் என்றால் இக்கண்டன கவிதைப்போராட்டத்தையும் சிலர் கொச்சையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் இவர்களுக்கு வேற வேலையே இல்லை இவர்களால் ஒரு ம--- ?? புடுங்கத்தெரியாது ஆனால் (இந்த வார்த்தையை பாவிப்பதற்கு மன்னிக்கவும் ஊடறு) யாராவது முன்னின்று செய்தால் அதற்கு புடுங்கத் தொடங்கி விடுவார்கள். பெரியாரைப் பற்றி பதிவு போடும் பெண்கள் என்று சொல்லக்கொள்ளும் சில பேமாளிகள் உட்பட இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது அது தான் இவர்களின் பலவீனம் நீங்கள் மௌனமாக இருந்து உங்கள் வேலைகளை பாருங்கள். அது தான் இன்றைக்கு தேவையான விடயம் இந்தக் கண்டனக்கவிதைக்கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. இப்பொழுது இந்தப்பதிவை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. வாழ்க பெண்கள் தொடர்ந்து ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்க என் போன்றவர்கள் உள்ளனர். என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கார்த்திக்
திருவண்ணாமலை

Thursday, January 22, 2009

அ-கடிதங்கள்


அ-கடிதங்கள்

-----------------

இலக்கமற்ற வீட்டிற்கு

நிறையகடிதங்கள்வந்துசேர்கின்றன.

காகிதமற்று,உறைகளற்று,

எழுத்துகளற்று,வார்த்தைகளற்ற

அ- கடிதங்களை

உருவமற்ற ஒருவன் / ள்

வாசிக்கிறான் / ள்.

பின்னவற்றை வேலைப்பாடு மிகுந்த

காற்றில் பின்னப்பட்ட பையொன்றில்

சேகரித்தபடி இருக்கிறான் / ள்

காலத்திற்கும் .

puthiyaparvai -dec2008

மரமற்ற இடமேது ?


மரமற்ற இடமேது ?

-------------------------

கிளையற்ற மரமொன்றை கண்டேன்

மரமற்று ,கனியற்று இருந்தது

விதையற்று வளர்ந்திருந்தது அம்மரம் .

வளர்வது மட்டும் இயல்பென்று .

வளர்வதெல்லாம் மரமென்றால்

மனமும் மரமன்றோ ?

வளராத ஏதோவொன்று சொல் ?

வளர்வதெல்லாம் மரமென்றால் மரமற்ற இடமேது ?
puthiyaparvai -dec 2008

Saturday, January 3, 2009

அ-கவிதை


அ-கவிதை

--------------

மேல்,கீழுமற்ற உலகில்

இறந்த ,நிகழ், வருங்காலமற்ற
ஒரு நாளில் பிறந்தேன்.

இருள்,வெளிச்சம் இரண்டுமற்ற பொழுதில்

கவிதையொன்றை எழுதி வைத்தேன்.

துக்கமும், சந்தோசமுமற்ற வாழ்நிலைப்பற்றி

அது இருக்கட்டும் அதை நீங்கள்

எந்த காலத்தில் அமர்ந்து

வாசித்தீர்கள்,

வாசித்துக் கொன்டிருக்கிறீர்கள்,

வாசிப்பீர்கள்

pithiaparvai - jan2009 issue

Friday, December 12, 2008

வர்ண டப்பா


வர்ண டப்பா


------------------


மழைநாள் மாலையில்


வானவில் தெரிந்தது .


குறுஞ்செய்தி கிடைத்து நீ இரவு வருவதற்குள்


அது அழிந்து விட்டது


அதிகாலை பயணத்தில் தேயிலை காடுகளின்


துளிர் பச்சை வர்ணத்தை


நீ உறங்கியபடி கடந்து விட்டாய் .


ஜன்னல் வழி கடந்த


விநோதப் பறவையின் வர்ணத்தை


யாரோடோ தொலைபேசியில் பேசியபடி தவற விட்டாய் .


யாவற்றையும் பின்பொருநாள் உன்னிடம்


காட்டவென எடுத்து வைத்திருக்கிறேன்


மகனின் வர்ண பூச்சுகளும்


தூரிகைகளும் சேகரிக்கும் டப்பாவில் .



இறுதி வார்த்தை


இறுதி வார்த்தை

-----------------------
வீரியமானதாய் இருக்கிறது விஷம்

நீர் குவளையிலிருந்த நீரனைத்தையும்

கீழே ஊற்றி விட்டேன் .

செல்பேசியைச் சிதைத்து விட்டேன் .

ஒரு சொட்டு எண்ணெய் இருக்கிறது

விளக்கில்

திரியின் நுனியில் இருக்கும் சுடர்

மங்கிக்கொண்டே வருகிறது .

இறுதிச் சொட்டிலிருக்கும்இந்தப்பேனாவால்

இன்னும் ஒரு வார்த்தைதான் எழுதலாம் .




எவருடைய பெயரையாவது எழுதிவைக்கலாம் .

என் சுயமரணத்திற்கு காரணமாய்

ஆனால் எனக்கு இப்போது

ஒரு கவிதை எழுதி வைக்கலாம் போலிருக்கிறது .

நீர்ப்பூ


நீர்ப்பூ

--------

மழைப் பொழிகிறது

வீட்டின் கூரையிலிருந்து

சொட்டுச்சொட்டாய் விழுகிறது

மழைநீர் .

ஒவ்வொரு துளீயும்

பூமியைத்தொடும் பொழுது

பூவொன்றுத் தோன்றி அடங்குகின்றது .

யாராலும் எடுக்கவோ

எடுத்து சூடவோயியலாத

நீர்ப்பூவொன்று .

(உயிரெழுத்து - நவம்பர் 2008)