Thursday, July 16, 2009

புது எழுத்து இதழ் 17 -( ஜூலை'2009 ) இல் வெளியான கவிதைகள்


பூவாத்தாவரம்

--------------------

வசந்தகாலம்

மண்டப சாலையில்

அதிகமாய் உதிர்ந்துக் கிடக்கும்

மஞ்சள் நிறப்பூக்களை

அள்ளிக் கொண்டுப் போய் கொட்டுகிறது

காற்று .

ஒரு பூவாத்தாவரத்தின் காலடியில்


சிற்றாறு

------------

பாலைவனத்தின் மணல் வெளியெங்கிலும்

ஓடுகிறது சிற்றாறு

தரையில் படாமல் ஓடுகிறது

அதன் நீர்
நிலவும் மிதக்காது

சூரிய ஒளியும் பாவாத

அச்சிற்றாறு

ஒட்டகங்களின்

கூனல் முதுகுகளில்.


கண்ணாடி றெக்கைகள்

-------------------------------

கிழிபட்டு

வேலியோரத்தில்

இறந்து கிடக்கும் தும்பியை

புரட்டிப்புரட்டிப் பார்க்கிறது

காற்று .

அதை எழுப்பும் விதமாய்

1 comment:

மாற்றுப்பிரதி said...

வணக்கம். நீண்ட நாட்களின் பின் உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிகிறது.சந்தோசம்.
வலைத்தளம் எல்லோரையும் இணைக்கிறது அல்லவா.
மற்றொரு சந்தர்பத்தில் பேசுவோம்.
றியாஸ் குரானா.
www.maatrupirathi.blogspot.com