Monday, July 27, 2009

பூமி தின்னி


பூமி தின்னி

அவன் பூமி தின்னி -
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்

அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்

அவன் ஸ்த்ரி வேட்டையன் -
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன் -

தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்

கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவி,
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி .

2 comments:

Vinitha said...

நெஞ்சை தொடுகிறது தோழி.

இன்பா சுப்ரமணியன் said...

நன்றி தோழி . வருத்த படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடுகள் தான் தலைநகரத்தில் நடந்த போராட்டம். விழைவு, செய்தான் காதில் ஊதிய சங்கு தான். தொடர்ந்து தொடர்பில் இருங்கள். உங்கள் அன்புக்கு நன்றி..
நேசமுடன்,
இன்பா.