Friday, December 12, 2008

சிறு மலர்


சிறு மலர்

--------------

இன்னமும்

பிறக்காத பூவொன்றை

சூடி திரிகிறது

இன்னமும் பிறக்காத

குழ்ந்தை ஒன்று

விதைகுள்ளிருகிறது மலர்..

கருவறைக்குள் இருக்கிறது குழ்ந்தை...

கர்பினியின் நினைவிலோ

நாளும் பூத்து குலுங்குகிறது

அச்சினஞ்சிறு மலர்.
(உயிரெழுத்து இதழ் -நவம்பர் 2008)

No comments: