Friday, December 12, 2008

தீ


தீ


---


தீ


தீக்குள் எரிந்துகொண்டிருந்தது


தீயின் மேல் தீ எரித்துக்கொண்டிருந்தது


தீ


தீயை சுற்றிலும் எரித்துக்கொண்டிருந்தது


எனக்கு நடுத்தீ வேண்டும்


மயில்வர்ண நடுத்தீயை


விரட்டிக் கொண்டு ஒடினேன்


காட்டின் இறுதிவரைக்கும்


மயில்வர்ணத்தீயை எரித்து அடங்கியது


தீ .



சாம்பல் காட்டுக்குள்ளிருந்து


வெளிவந்தேன் .


(உயிரெழுத்து நவம்பர் 2008)



No comments: