Friday, December 12, 2008

வர்ண டப்பா


வர்ண டப்பா


------------------


மழைநாள் மாலையில்


வானவில் தெரிந்தது .


குறுஞ்செய்தி கிடைத்து நீ இரவு வருவதற்குள்


அது அழிந்து விட்டது


அதிகாலை பயணத்தில் தேயிலை காடுகளின்


துளிர் பச்சை வர்ணத்தை


நீ உறங்கியபடி கடந்து விட்டாய் .


ஜன்னல் வழி கடந்த


விநோதப் பறவையின் வர்ணத்தை


யாரோடோ தொலைபேசியில் பேசியபடி தவற விட்டாய் .


யாவற்றையும் பின்பொருநாள் உன்னிடம்


காட்டவென எடுத்து வைத்திருக்கிறேன்


மகனின் வர்ண பூச்சுகளும்


தூரிகைகளும் சேகரிக்கும் டப்பாவில் .



No comments: