Wednesday, December 10, 2008

கண்டனக் கவிதைப் போராட்டம்

கடலலைகளின் பின்னணியில்கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டம்பல்லாண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்கள்பால் தமிழகத்தின் கவனமும்அனுதாபமும் குவிந்திருப்பதன் நீட்சிகளில் ஒன்றாக, கடந்த ஏழாம் திகதிஞாயிற்றுக்கிழமை மெரீனா கடற்கரையில் நடந்தேறிய கண்டனக் கவிதைப்போராட்டத்தைக் கூறலாம். இந்நிகழ்வானது, ஈழத்தில் இடம்பெயர்ந்து அகதிகளாகஅலைக்கழியும் மக்களின் துயரத்தினை வெளிப்படுத்தி அவர்களை நோக்கி ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது.காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழகத்திலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும்எழுத்தாளர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.கண்டனக் கவிதைப் போராட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய கவிஞர் லீனாமணிமேகலை, அகதிகளாகி ஈழத்தமிழர்கள் படும் அவலங்களை எடுத்துரைத்ததுடன்,அப்பிரச்சனை குறித்த அரசியல் மௌனங்களைச் சாடிப்பேசினார். பறையொலிக்கும்,கற்பனை வளம் மிகுந்த ஒப்பாரிக் கலைஞரான லஷ்மியின் பிரலாபத்திற்கும்அலையோசை பின்னணி இசைத்தது. பல்வேறுபட்ட உணர்வுடையவர்கள்,கருத்துடையவர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கூடியிருப்பதையிட்டுமகிழ்வதாக கவிஞர் சுகிர்தராணி தனது உரையில் குறிப்பிட்டார். கவிஞர் இன்பாசுப்பிரமணியம் பேசுகையில், "நமது முதுகில் இருக்கும் உலகத்திற்குக்கண்கள், காதுகள் மட்டுமே இருக்கின்றன. வாய் கிடையாது. அதனால் நாம்பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்"என்றார். எந்த அரசையோதனிமனிதரையோ சாடிப் பேசுதல் ஆகாது என்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி,அத்தனை கவிஞர்களுக்குமிடையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்ததை நிகழ்வுநெடுகிலும் காணக்கூடியதாக இருந்தது.யவனிகா ஸ்ரீராம், எஸ்.தேன்மொழி, கம்பீரன், தமிழச்சி தங்கபாண்டியன், தாராகணேசன், கு.பழனிச்சாமி, ராஜா சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், செல்வகுமாரி,சரவணகுமார், மரகதமணி, நிஷாந்தினி, பாலை நிலவன், அக்கினி சிவகுமார்,அ.வெண்ணிலா, லதா ராமகிருஷ்ணன், பழ.புகழேந்தி, கண்டராதித்தன்,அய்யப்பமாதவன், ஸ்ரீதேவி, டி.எஸ்.எஸ்.மணி, சக்தி அருளானந்தம், இளங்கவிஅருள், பத்தினாதன், சுகுணா திவாகர், இன்குலாப், இளம்பிறை, கோணங்கி,பாக்கியம் சங்கர், சல்மா பிரியதர்சன், நரன், கு.உமாதேவி, ராஜதுரை,வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி, பிரியம்வதா,இசை,கனகபாரதி,ஐகோ, யாழன் ஆதி,இன்பா சுப்பிரமணியம், பவுத்த அய்யனார், வ.கீதா, அ.மங்கை, ரேவதி, உமாஷக்தி பிரசன்னா ராமஸ்வாமிஅபிலாஷ், விஜயலஷ்மி, கனிமொழி, சுகிர்தராணி,தினகரன், சந்திரா, கிருஷாங்கினி, ஆனந்த், செந்தமிழ் மாரி, யூமா வாசுகி,ரமேஷ் பிரேதன், அரங்கமல்லிகா இவர்களோடு மேலும் பலர் கவிதை வாசிப்பில்கலந்துகொண்டனர். செம்பை மணவாளன், றொபேட், ரவி சுப்பிரமணியன் ஆகியோரால்இடையிடையே உணர்வெழுச்சி மிக்க பாடல்களும் பாடப்பட்டன.ஈழத்துக் கவிஞர்களான கருணாகரன், சேரன், பா.அகிலன், சிவரமணி ஆகியோரின்கவிதைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. ரவி சுப்பிரமணியனின் கணீரென்றதும்உருக்கமானதுமான வாசிப்பு அக்கவிதைகளை மெய்யான பொருளில் வெளிக்கொணர்ந்தன.கவிஞர் யூமா வாசுகி தனதுரையில், 'கவிஞர்களின் கண்டனப் போராட்டமானதுஉணர்வெழுச்சி மிக்க எதிர்ப்புக்குரல்'என்றார்.மதியத்தின் பின்னான நிகழ்வுகளை எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் ரவிசுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்தளித்தனர். கவிஞர்களின் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்து கனடாவிலிருந்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், கவிஞர்இளங்கோ, இலண்டனிலிருந்து எழுத்தாளர் நாகார்ஜுனன் ஆகியோர் அனுப்பியிருந்தஅஞ்சல்கள் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இறுதியாக, வளர்மதியின்நெறியாள்கையில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலையை மையமாகக்கொண்ட அவ்வளிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றது.கண்டனப் போராட்டத்தின் தீர்மானங்களை தமிழில் கவிஞர் லீனா மணிமேகலையும்ஆங்கிலத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் வாசித்தார்கள். பல்வேறுஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி
-------
பதிவு : தமிழ் நதி
நன்றி :www.tamilpoets.blogspot.com

2 comments:

butterfly Surya said...

வெல்க ..

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya.blogspot.com

இன்பா சுப்ரமணியன் said...

மிக்க நன்றி.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....
நட்புடன்

இன்பா சுப்ரமணியன்.